குறைதீர் கூட்டத்தில் அனைத்து கட்சியினர் மனு மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து தனியார் மருத்துவமனை டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, ஜூன் 18: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி இறந்ததை தொடர்ந்து இரு பயிற்சி மருத்துவர்கள், உறவினர்களால் தாக்கப்பட்டனர். இதை கண்டித்து மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களில் மருத்துவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இந்நிலையில் நேற்று தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர். மேலும் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சங்க மாவட்ட தலைவர் அன்பழகன், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் வினோத், இந்திய மருத்துவர் சங்க நிர்வாகி மாரிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை, மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவனைகளில் டாக்டர்கள் கருப்பு பேட்ஜி அணிந்து பணியாற்றினர்.கும்பகோணம்: கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் தாலுகாக்களில் உள்ள 40 தனியார் மருத்துவமனையில் 350 டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர் கும்பகோணம்- சென்னை சாலையில் உள்ள இந்திய மருத்துவ கழக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்திய மருத்துவ கழக மாநில தலைவர் கனகசபாபதி தலைமை வகித்தார். கிளை தலைவர் செல்வராஜ், செயலாளர் பாலகணேஷ் மற்றும் பலர் பங்கேற்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.

Related Stories: