கல்லூரிக்கு உற்சாகமாக செல்லும் மாணவிகள் பயணியை தகாத வார்த்தைகளால் திட்டிய தனியார் பேருந்து டிரைவர் கண்டக்டரின் உரிமம் ரத்து வாட்ஸ்ஆப் வீடியோ வைரலானதால் நடவடிக்கை

கும்பகோணம், ஜூன் 18: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த 15ம் தேதி மதியம் 1 மணிக்கு திருச்சியை தலைமையிடமாக கொண்ட தனியார் பேருந்து புறப்பட்டது. அப்போது பண்டாரவாடையை சேர்ந்த ஒருவர் கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்தார். பின்னர் பண்டாரவாடை செல்வதற்காக கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் நின்று கொண்ருந்த தனியார் பேருந்தில் ஏறினார்.அப்போது தனியார் பேருந்து டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் பண்டாரவாடைக்கு பேருந்து புறப்படும்போது தான் ஏற வேண்டுமென கூறி கீழே இறங்குமாறு தகாத வார்த்தைகளில் பேசினர். பின்னர் அவரை தாக்கிய கண்டக்டர் முயன்றார். இதனால் அதிர்ந்து போன பயணி ஒருவர், அதை வீடியோ எடுத்து வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டு வெளியிட்டார். டிரைவர், கண்டக்டர் ஆகியோர் பயணியை தரக்குறைவாக பேசிய வீடியே மற்றும் ஆடியோ வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவியது.இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருச்சியை சேர்ந்த தனியார் பஸ் உரிமையாளர் ஷியாம்சுந்தர், கணபதி அக்ரஹாரத்தை சேர்ந்த டிரைவர் கோகுல்பிரசாத், கரூர் மாவட்டம் கடவூரை சேர்ந்த கண்டக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோரை அழைத்து கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் நேற்று விசாரணை நடத்தினார். அப்போது இருவரும், நடந்த சம்பவத்தில் எங்கள் மேல் தவறுள்ளது என்று ஒப்பு கொண்டுள்ளனர். இதையடுத்து பயணியை தகாத வார்த்தையால் திட்டியதாலும், இவர்களின் நடத்தை சரியில்லாததாலும் டிரைவர், கண்டக்டர் உரிமத்தை வரும் 6 மாதத்துக்கு தகுதி நீக்கம் செய்து வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் உத்தரவிட்டார்.

Related Stories: