×

புதுகை அடுத்த குழிபிறையில் சமூக பிரச்னையில் வழக்கு பதிந்த 15 பேர் மீது நடவடிக்கை இல்லை

புதுக்கோட்டை, ஜூன் 18: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார். அப்போதுபுதுக்கோட்டை மாவட்டம் செவலூர் கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் பொதுமக்கள் கொடுத்த மனுவில்,கடந்த 10ம் தேதி மாலையில் குழிப்பிறையில் உள்ள பள்ளிக்கு சென்று வந்த எங்கள் சமூகத்தை சேர்ந்த மாணவர்களை சாதி பெயரை சொல்லி திட்டி சிலர் அடிக்க சென்றனர். இதைத்தொடர்ந்து மாணவர்களின் உறவினர்கள் சாதி பெயரை சொல்லி திட்டிவர்கள் வீட்டிற்கு சென்று இதுகுறித்து கேட்டனர்.அப்போது அவர்கள் எங்களை கற்கள் மற்றும் கம்பியால் தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் பனையப்பட்டி போலீசார் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்து உள்ளனர். ஆனால் யாரையும் கைது செய்யவில்லை. எனவே கலெக்டர் நடவடிக்கை எடுத்து எங்களை சாதி பெயரை சொல்லிதிட்டி தாக்கிய 15 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

Tags :
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு