×

திருமழபாடி அருகே மாரியம்மன் கோயில் தேரோட்டம்

அரியலூர்,ஜூன் 18: திருமழபாடி அருகே கோவில்எசனை கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.அரியலூர் மாவட்டம் திருமழபாடி அருகே கோவில் எசனை கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் நடைபெறும், இந்தாண்டு தேர் திருவிழா கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் இரவு அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது. நேற்று முன்தினம் பொங்கல் வைத்து மாவிளக்கு பூஜையும், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று 40 அடி உயரம் உள்ள தேரில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர். காலை 10 மணிக்கு தேர் வடம்பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது.தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மதியம் 3 மணிக்கு நிலையை வந்தடைந்தது. இன்று முளைபாரி மற்றும் காவடி எடுத்தல் அலகு குத்துதல் நிகழ்ச்சியும், நாளை மஞ்சள் விளையாட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தென்னையை தாக்கும் சிவப்பு கூன் வண்டு இந்தியாவில் தென்னை சாகுபடியானது 2016-17 புள்ளி விபரங்களின் படி 2 லட்ச த்து 82 ஆயிரம் எக்டேரில் மேற்கொள்ளப்பட்டு, ஒரு எக்டேருக்கு சராசரியாக 11 ஆயிரத்து 481 தேங்காய்கள் மகசூலாக பெறப்பட்டு மொத்த உற்பத்தியாக 23 ஆயிரத்து 904 மில்லியன் தேங்காய்கள் அறுவடை  செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் 4.62லட்சம் எக்டேரில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு பரப் பளவில் இந்திய அளவில் 3ம் இடத்தையும், எக்டேருக்கு 14ஆயிரத்து 251 காய்களை மகசூலாக பெற்று உற்பத்தித்திறனில் முதல் இடத்தையும், மொத்த உற்பத்தி யாக 6 ஆயிரத்து 570 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்து உற்பத்தியில் மூன்றாம் இடத்திலும் உள்ளது.தென்னையை பல்வேறு பூச்சிகள் தாக்கி மகசூல் இழப்பிற்கு காரணமாக அமை கின்றன. மேலும் குரும்பைகள் கொட்டுவதற்கு பூச்சி தாக்குதலும் ஒரு முக்கிய அம்ச மாகும். நீண்ட உருவ அமைப்பை உடைய இந்த வண்டானது சிவப்பு நிறமா கவும், 6 கருப்பு புள்ளிகளுடனும் காணப்படும். இதன் வாய்ப்பாகம் தும்பிக்கை போன்று நீண்டு வளைந்திருக்கும்.ஆண் வண்டுகளின் வாய்ப்பாகத்தின் மீது உரோ மங்கள் அடர்த்தியாகக் காணப் படும். புழுக்கள் சிவப்பு நிற தலையையும், வெளிறிய மஞ்சள் நிற உடலையும் கொண்டிருக்கும். இது 35 மி.மீ நீளம் உடையது.இளந்தென்னையை குறுகிய காலத்தில் தாக்கி அதிக அளவில் சேதம் விளைவி ப்பது கூன் வண்டுகளாகும். இதன் புழுக்கள் இளந்தண்டுப் பகுதிக்குள் சென்று சோற்றுப் பகுதியைத் தின்று வாழ்கின்றன. இதனால் இளந்தண்டின் உட்பகுதி எங்கும் சுரங்கம் போன்ற துவாரங்கள் ஏற்பட்டு மரம் எளிதாக முறிந்து விடும்.புழுக்கள் இளந்தண்டினுள் சென்ற துவாரங்கள் வழியே சிவப்பு நீர் வெளிவந்து காய்ந்து சிவப்பு பிசின் போன்று காணப்படும். மேலும் புழுக்கள் மரத்தை குடை வதால் சக்கைகள் வெளியே தள்ளப்பட்டிருக்கும். 20 அல்லது 25 ஆண்டுகளுக்கு குறைவான வயதுடைய மரங்களையே இது அதிக அளவில் தாக்கும்.

மரங்களின் நுனிப்பகுதியை தேவையான இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும். தாக்கப்பட்ட இறந்த மரங்களை உடனே வெட்டி அப்புறப்படுத்தி தீயிட்டு எரித்து விட வேண்டும். இதனால் கூன் வண்டுகள் மீண்டும் பரவுவதை தடுக்கலாம். மரங்களின் தண்டு பகுதியில் காயங்கள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம். மேலும் துவாரங்கள் இருப்பின் அவற்றை சிமெண்டு அல்லது களிமண் பூசி அடைத்து விட வேண்டும். மரங்களின் தண்டு பகுதியின் மீது படிக் கட்டு போன்ற அமைப்பினை செதுக்க கூடாது.பச்சை மட்டைகளை வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வெட்டுவதாயின் தண்டிலிருந்து 120 செ.மீ தள்ளி வெட்ட வேண்டும். நுனி நடுக் குருத்து மற்றும் இலை மட்டை இடுக்குகளில் வேப்பங்கொட்டைத் தூள் 5 கிராம் கொண்ட 2 பாக் கெட்டுகள் (துளையுடன் கூடிய) ஆறு மாத இடைவெளியில் வருடத்திற்கு இரண்டு முறை வைப்பதால் காண்டாமிருக வண்டு தாக்கிய இடங்களில் சிகப்புக் கூன் வண்டு முட்டையிடுவதைத் தடுக்கலாம். (அல்லது) முதல் மூன்று இலை இடுக்கு களில் மூன்று பூச்சி உருண்டைகளை மூன்று பாக்கெட்டுகளில் (துளையுடன் உள்ள) ஆறுமாத இடைவெளியில் வருடத்திற்கு இரண்டு முறை வைக்க வேண்டும்.மரங்களின், தண்டுப் பகுதியிலுள்ள தாக்கப்பட்ட துளைகளில் 5 மிலி மோனோ குரோட்டோபாஸ் 36 எஸ் எல் ரூ.5 மிலி டைகுளோர்வாஸ் 76 டபிள்யூசி மருந்தை கலந்து ஊற்றி துளைகளை சிமெண்ட் அல்லது களிமண் பூசி அடைத்து விடவும்.
அதிகம் பாதிக்கப்பட்ட மரங்களில் வேர்மூலம் 10 மிலி மோனோகுரோட்டோ பாஸ் 36 எஸ் எல் மருந்தை 10மிலி தண்ணீரில் கலந்து 45நாட்கள் இடை வெளியில் மூன்று முறை தொடர்ந்து செலுத்தவும்.வேர்மூலம் மருந்து செலுத்துவதற்கு முன் காய்களை அறுவடை செய்துவிடவும். மேலும் மருந்து செலுத்திய 45 நாட்கள் கழித் துத்தான் அறுவடை செய்ய வேண்டும்.

தாய்பூச்சி சாம்பல் நிறமாகவும், அளவில் சிறியதாகவும் காணப்படும். புழுவானது பச்சை கலந்த பழுப்பு நிற உடலையும், கருப்பு நிற தலையையும் கொண்டிருக்கும். இது சுமார் 25 மி.மீ நீளம் உடையது.மிகுந்த தாக்குதலின் போது, பழைய இலை மட்டைகள் முழுவதும் காய்ந்து பழுப்பு நிறமாகவும், 3 அல்லது 4 இளம் இலை மட்டைகள் மட்டும் நடு அடுக்கில் பச்சை யாக தென்படும். இந்த தாக்குதலின் தொடர்ச்சியாக இலை மட்டைகளின் எண்ணிக்கை சரி பாதியாக குறைந்து விடும். தாக்கப்பட்ட இலைகளின் அடிப் பாகத்தில் பச்சையம் சுரண்டப்பட்ட நூலாம் படையினுள் புழுக்கள் மறைந்து இருக்கும்.இப்புழுக்கள் பாரன்கைமேட்ஸ் செல்களைக் கொண்ட பச்சையத்தை மிக வேகமாக சுரண்டி தின்னும். இதனால் ஒளிச் சேர்க்கை குறைந்து தேங்காய் மகசூல் குறை கிறது. அதிகம் தாக்கப்பட்ட மரங்களில், தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது தீயினால் கருகிய இலைகள் போன்று தோற்றமளிக்கும். எல்லா வயதுடைய தென்னை மரங்களிலும் இப்புழுக்களின் தாக்குதலை காணலாம்.இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் ராஜாரமேஷ், ராமசுப்பிரமணியன் ஆகியோர் கூறுகையில்,கீழ் அடுக்குகளில் உள்ள அதிகம் சேதமடைந்து காய்ந்துபோன இலைகளை (2-3) வெட்டி அப்புறப்படுத்தி தீயிட்டு எரிக்கவும். தாக்கப்பட்ட இடத்தில் கருந்தலைப் புழுவின் தாக்குதல் எந்த நிலையில் உள்ளது என்பதைக் கண்டறிந்த பின்பு கீழ்க் கண்ட ஒட்டுண்ணிகளைத் தேவையான அளவில், தகுந்த இடைவெளிகளில் (15 நாட்கள்) விடவும்.கருந்தலைப் புழுப்பருவத்தை கட்டுப்படுத்த பிராக்கனிட் மற்றும் பெத்திலிட் ஒட்டுண்ணிகளை மரம் ஒன்றுக்கு முறையே 20 மற்றும் 10 என்ற எண்ணிக் கையில் விடவும். சால்சிட் அல்லது யுலோபிட் ஒட்டுண்ணிகளை முறையே மரம் ஒன்றுக்கு 1 மற்றும் 20 என்ற எண்ணிக்கையில் கூட்டுப்புழு நிலையில் விட வேண்டும்.

பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளித்திருந்தாலோ அல்லது வேர் மூலம் செலுத் தியிருந்தாலோ 21 நாட்கள் முடிந்த பிறகு ஒட்டுண்ணிகளை 15 நாட்கள் இடை வெளியில் தொடர்ந்து 5 அல்லது 6 முறை விட வேண்டும். தாக்கப்பட்ட மரங்களுக்கு பயிர் பாதுகாப்பு முறைகளை செய்வதோடு, பரிந்துரை செய்யப் பட்ட அளவில் உரம் மற்றும் நீர் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.தாக்குதல் அதிகமாக இருக்கும் போது டைகுளோர்வாஸ் 76 டபிள்யு எஸ்சி 2மிலி அல்லது மாலத்தியான் 50 ஈசி 5 மிலி மருந்தினை 1 மிலி ஒட்டு திரவத்தையும் சேர் த்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.ஒரு மரத்திற்கு சுமார் 10 முதல் 20 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். தாக்கப்பட்ட இலைகளின் அடிப்பாகங்களில் உள்ள நுாலகம் படைகளின் மீது நன்கு படும்படி தெளிக்கவும். தென்னையில் மருந்துகளை தெளிப்பதற்கு ராக்கர் அல்லது மிதித் தெளிப்பானைப் பயன்படுத்த வேண்டும்.மிக அதிகளவு தாக்குதல் பரவியிருக்கும் போது, தாக்கப்பட்ட மரங்களின் நன்கு வளர்ந்த சிகப்பு நிறமுள்ள வேரினை சாய்வாக வெட்டிய பின், வேரினை துளை கள் இல்லாத பாலிதீன் பை (75*10 செ.மீ) யில் மானோ குரோட்டோபாஸ் 36 எஸ் எல் 10 மிலி ரூ தண்ணீர் 10 மிலி கலந்த கலவையில் வேரினை இட்டு நன்றாக பஞ்சை வைத்து இறுக்கமாகக் கட்டிவிட வேண்டும்.மருந்து கலவை ஈர்க்காவிடில் வேறொரு வேரின் மூலம் செலுத்த வேண்டும். தேங்காய் அறுவடையை வேர்மூலம் மருந்து செலுத்தப்படுவதற்கு முன்போ அல்லது 45 நாட்கள் முடிந்த பின்போ செய்யலாம்.புழுக்கள் மரத்தை குடை வதால் சக்கைகள் வெளியே தள்ளப்பட்டிருக்கும். 20 அல்லது 25 ஆண்டுகளுக்கு குறைவான வயதுடைய மரங்களையே இது அதிக அளவில் தாக்கும்.

Tags : temple ,Mariamman Koirala ,Thiruppalapadi ,
× RELATED தேவிபட்டணம் காளியம்மன் கோயில் குளத்தை அமலைச் செடிகள் ஆக்கிரமிப்பு