×

ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

அரியலூர், ஜூன் 18: அரியலூரில் காவல் துறை சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து காவலர்களின் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை எஸ்பி னிவாசன் தொடங்கி வைத்து,ஹெல்மெட் அணிந்து பேரணியில் பங்கேற்றார்.அண்ணாசிலை அருகே தொடங்கிய இந்த இரு சக்கர வாகனப் பேரணியானது ,கடைவீதி,மார்க்கெட்,ராஜாஜி நகர் மற்றும் பிரதான சாலை வழியாக சென்று மீண்டும் அண்ணாசிலையில் நிறைவடைந்தது. பேரணியில், ஹெல்மெட் அணிவதன் அவசியம், ஒரு வாகனத்தில் இரண்டு நபர்கள் மட்டும் பயணம் செய்வது, சாலை விதிகளை எவ்வாறு கடைபிடிப்பது, பாரம் ஏற்றும் வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வதை தவிர்ப்பது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது உள்ளிட்ட சாலை விதிகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக்கூறப்பட்டதுடன், சாலை விதிகள் அடங்கிய துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது.

Tags :
× RELATED பெரம்பலூர் /அரியலூர் கொள்ளை நோய் பரவலை...