×

செல்போன், பணம் பறித்தை பறித்து கொண்டு பெட்ரோல் குண்டு வீசி 3 கார்கள் எரிந்து நாசம்:

* தனியார் நிறுவன மேலாளருக்கு சரமாரி அடி
* மர்மநபர்களுக்கு வலை
* பொதுமக்கள் கடும் பீதி

செங்கல்பட்டு, ஜூன் 18: மறைமலை நகர் அருகே, தனியார் நிறுவன மேலாளரை தாக்கி செல்போன், பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு, 3 கார்களுக்கு தீ வைத்த மர்மநபர்களை, போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். ருப்புக்கோட்டையை சேர்ந்தவர் பாபு (25). மறைமலைநகர் அடுத்த கீழ்க்கரணை பகுதி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில்  வசிக்கிறார். அதே பகுதியில் உள்ள தனியார் கார் கம்பெனியில் மேலாளராக வேலை பார்க்கிறார்.நேற்று முன்தினம் இரவு சுமார் 12 மணியளவில், பாபுவின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து, வீட்டின் வெளியே நின்று, செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல், திடீரென பாபுவை சரமாரியாக அடித்து உதைத்தது. பின்னர், அவர் கழுத்தில்  கத்தியை வைத்து செல்போன், ₹6 ஆயிரம் ஆகியவற்றை பறித்து கொண்டு, அவரது  வீட்டையும் அடித்து உடைத்தது. மேலும்,  வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்த 3 கார்களை அடித்து நொறுக்கிவிட்டு, அதன் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி சென்றது. சத்தம் கேட்டு வெளியே வந்த பொதுமக்கள், அதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

தகவலறிந்து, மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். அதற்குள் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இதுதொடர்பாக மறைமலைநகர்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.அதில், மல்ரோசாபுரத்தை சேர்ந்த கோபு, தீனா ராகேஷ், ஹரிஷ், வெங்கடேஷ், ஜோசப் உள்பட 10 பேர் கொண்ட ரவுடி கும்பல் தாக்கியது என தெரிந்தது. மேலும் விசாரணையில், இரவு நேரங்களில் தனியாக தங்கியிருக்கும்  வெளியூர் நபர்களை மிரட்டி அடித்து பணம் பறிக்கும் சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபடுவதும்  தெரிய வந்துள்ளது. போலீசார், அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.இதே பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன், உணவு விடுதியில் பெட்ரோல் குண்டு போட்டு, விடுதி உரிமையாளர்களான 2 பெண்களுக்கு ஒருவர்  கொலை மிரட்டல் விடுத்து சென்றது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற தொடர் சம்பவத்தால் அப்பகுதி பெண்கள், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம்...