×

குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் 75 பேருக்கு ₹8 லட்சம் நலத்திட்ட உதவிகள்: கருணை அடிப்படையில் மூவருக்கு பணி நியமன ஆணை

காஞ்சிபுரம், ஜூன் 18: மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் நேற்று 75 பேருக்கு ₹8,29,554 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதில், 3 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை கலெக்டர் பொன்னையா வழங்கினார்.காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர  மக்கள் குறைகேட்பு  நாள்  கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பொன்னையா தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றார்.
அதில் முதியோர், விதவை, மாற்று திறனாளிகள் உதவித்தொகை, கல்விக்கடன், வீட்டுமனை பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் உள்பட பல  கோரிக்கைகள் அடங்கிய 450 மனுக்கள்  பெறப்பட்டன. அதனை பரிசீலனை செய்து, மேல் நடவடிக்கைக்காக சம்பந்தப்ட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் வழங்கினார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 60 பேருக்கு ₹2,14,320 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்கள், 15 பேருக்கு ₹65,234 மதிப்பில் இலவச சலவை பெட்டி, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 4 பேருக்கு முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.மதுராந்தகம் ஒன்றியம், காவாதூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பளர் வேம்புலி என்பவர் பணியிடையே இறந்ததால், அவரது மகள் தேவிகாவுக்கும், வருவாய் துறையில் பிந்துஜா என்பவருக்கு கிராம நிர்வாக அலுவலராகவும், வெங்கடேசன் என்பவருக்கு அலுவலக உதவியாளராகவும் பணி நியமன ஆணை கருணை அடிப்படையில் வழங்கப்பட்டது.

முன்னாள் படைவீரர்களின் கொடி நாள் வசூல் நிதியாக பெரும்புதூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ₹3 லட்சம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ₹3.3 லட்சம், காஞ்சிபுரம் நகராட்சி ₹2,35,750, குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் ₹1,05,000 என அந்தந்த துறை அலுவலர்கள், மாவட்ட கலெக்டரிடம் காசோலைகளை வழங்கினர். மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) நாராயணன், (கணக்கு) சீனிவாசன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர்  சுமதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜவஹர், மாவட்ட ஆதிதிராடவிடர் நலத்துறை அலுவலர் தனலட்சுமி உள்பட உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...