தண்ணீர் செலவை குறைக்க நெல்லுக்கு மாற்றுப்பயிராக சிறுதானியங்கள் சாகுபடி வேளாண் துறை ஆலோசனை

திருவாடானை, ஜூன் 14:  திருவாடானை வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா விடுத்துள்ள அறிக்கையில், ‘மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திருவாடானை வட்டாரம் திகழ்கிறது. இங்கு 26 ஆயிரம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்படுகிறது. தற்போது போதிய மழை இல்லாத காரணத்தால் நெல் விதைப்பு செய்யும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால் நெல்லுக்கு மாற்று பயிராக சிறுதானியங்களான கேழ்வரகு, குதிரை வாலி, சோளம் போன்ற பயிர்களையும், உளுந்து பாசிப்பயறு போன்ற பயிர்களையும் சாகுபடி செய்யலாம். பயிர் வகைகளுக்கு நெல் பயிரை விட குறைந்த தண்ணீர் போதுமானது. தற்போது மழை பெய்யாத நிலையில் குறைந்த தண்ணீர் செலவு, குறைந்த முன் பணமே ேதவைபடும். எனவே அனைத்து விவசாயிகளும் இதுபோன்ற தானிய பயிர்களை சாகுபடி ெசய்து பலனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Tags :
× RELATED இயற்கை விவசாயத்தில் தீவிரம் காட்டவேண்டும்