செல்போன் பயன்பாடு அதிகரிப்பு பெண் குழந்தைகள் மீது தனிக்கவனம் தேவை சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

தொண்டி, ஜூன் 14:  பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் பெண் குழந்தைகள் மீது பெற்றோர்கள் கல்வி மற்றும் ஒழுக்கம் குறித்து தனி கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நவீன கால வளர்ச்சிக்கு ஏற்ப செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. கல்வியின் வளர்ச்சியை விட ஒழுங்கீனமான செயல்களுக்கே அதிகளவில் செல்போன் பயன்படுத்தப்படுகிறது. இது பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கி விடுகிறது. மாணவர்கள் பள்ளி செல்லும் போது அவர்களின் செயல்பாடுகள் முழுவதையும் கண்காணிக்க வேண்டும். நண்பர்களுடன் செல்லும் இடங்கள் குறித்தும் அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

செல்போன் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க செய்ய வேண்டும். பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் ஒழுக்கம் செல்போனால் எவ்விதத்திலும் பாதிக்க படாதவாறு பார்த்துக்கொள்ளவதே நல்லது. இதுகுறித்து சமூக ஆர்வலர் காதர் கூறியது, பெண் குழந்தைகள் தற்போது அதிக அளவில் செல்போன் பயன்படுத்துகின்றனர. டிக்டாக் உள்ளிட்ட தேவையில்லாத செயலியை பயன்படுத்தி தங்கள் வாழ்வை சீரழித்து விடுகின்றனர். பெற்றோர்கள் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் பெண் குழந்தைகள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Tags : activists ,
× RELATED திருச்செங்கோட்டில் காவலன் செயலி பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு கூட்டம்