குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தில் சட்ட விழிப்புணர்வு பிரசாரம்

ராமநாதபுரம், ஜூன் 14:  குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு பிரசார பயணம் துவக்கி வைக்கப்பட்டது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் கொடி அசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி ராமகிருஷ்ணன், தலைமை குற்றவியல் நீதிபதி சிவபிரகாசம், சார்பு நீதிபதி ராமலிங்கம், நடுவர் 2 ராதாகிருஷ்ணன் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க தலைவர் ரவிசந்திர ராமவன்னி, மற்றும் வக்கீல்கள் சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் தன்னார்வ தொண்டுநிறுவன உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரசார வாகனம் நகரின் முக்கிய வீதிகளில், பொதுமக்கள் கூடும் இடத்தில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பிரசாரம் செய்யப்பட்டது.

× RELATED குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் பள்ளியில் உறுதிமொழி ஏற்பு