விபத்தில் டிரைவர் பலி, 2 பேர் காயம்

ராமநாதபுரம், ஜூன் 14: ராமநாதபுரம் அருகே கீழக்கரையைச் சேர்ந்த சிராஜூதீன் மனைவி ரஹ்மத் நிஷா (29), மகன் முகமதுபதீன்(5). சிராஜூதீன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். ரஹ்மத் நிஷா, மகனுடன் பட்டுக்கோட்டை செட்டித் தெருவில் வசித்து வருகிறார். கணவர் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்ததாகக் கூறப்படுவதை அடுத்து பட்டுக்கோட்டையில் இருந்து காரில் ரஹ்மத்நிஷா மகனுடன் நேற்று முன்தினம் கீழக்கரைக்கு வந்தபோது, ராமநாதபுரம் இசிஆர் சாலையில் பெட்ரோல் பங்க் அருகே திடீரென கார்   பாலத்தின் சுவற்றில் மோதியது.  இதில் காயமடைந்த பட்டுக்கோட்டையை சேர்ந்த டிரைவர் ஜாவியத் பைசல் (28) பலியானார்.   ரஹ்மத் நிஷா, மகன் முகமதுபதீன் காயமடைந்தனர்.

Tags : accident ,
× RELATED விருத்தாசலம் அருகே பைக் விபத்தில் டிரைவர் பலி