×

வைகையின் குறுக்கே மேலும் ஒரு பாலம் 2014ல் போட்ட திட்டம் 5 ஆண்டுக்கு பின் உயிர்பெறுகிறது

மதுரை, ஜூன் 14: மதுரையில் வைகை ஆற்றின் குறுக்கே செல்லூர் முதல் படித்துறை வரையிலும் அருள்தாஸ்புரம் முதல் ஆரப்பாளையம் வரையிலும் கரைகளை இணைக்கும் வகையில் ஏற்கனவே தரைப்பாலம் இருந்தது. இதனை இடித்து விட்டு 2 உயர்மட்ட பாலங்களை நகர் ஊரமைப்புத்துறை போக்குவரத்து மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கதுறை சார்பில் கட்ட திட்டமிடப்பட்டது. அந்த வகையில் செல்லூர்-படித்துறை இடையே ரூ.15.01 கோடி செலவிலும், ஆரப்பாளையம்-அருள்தாஸ்புரம் இடையே ரூ.16.17 கோடி செலவிலும் என மொத்தம் ரூ.30.40 கோடி மதிப்பீட்டில் கடந்த 2014ல் கட்டப்பட்டது. அப்போதே மேலும் 2 உயர்மட்டப்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டது.

ஆனால் தொடர்ந்து 5 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியின் அவலநிலை காரணமாக மேலும் 2 பாலங்களை கட்ட முடியாமல் போனது. காலம் கடந்த நிலையில் தற்போது ஒரு புதிய உயர்மட்டப்பாலம் மட்டும் குருவிக்காரன் சாலை தரைப்பாலத்தை இடித்து விட்டு கட்டப்பட இருக்கிறது. இப்பாலம் ரூ.27.5கோடி மதிப்பீட்டில் கட்டப்பட இருக்கிறது. தொழில்நுட்ப அனுமதி பெற்ற பின்னர் பாலம் கட்டுமானப்பணி துவங்கும். புதிய உயர் மட்டப்பாலம் 225 மீட்டர் நீளம், 12மீ அகலம் கொண்டதாக கட்டப்படும். 6 அடி அகலத்தில் நடைபாதை அமைக்கப்படுகிறது. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் பணிகள் துவங்கும் என மாநகராட்சி பொறியாளர்கள் தெரிவித்தனர்.

Tags : bridge ,Vaigai ,
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!