×

கிராம உதவியாளர்கள் தொடர் போராட்டம்

உடுமலை, ஜூன் 14: தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கடந்த 11-ம்தேதி மாலை முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 3-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. பதவி உயர்வில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும், தேர்வு நிலை ஊதிய உயர்வை 6 சதவீதம் வழங்க வேண்டும், கனிம வள கொள்ளையர்களிடம் இருந்து பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், ஜே.என்.பாளையம் கிராம உதவியாளர் செல்வராஜ் மீது பொய் வழக்கு பதிவு செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது. நேற்று நெற்றியில் பட்டை நாமம் போட்டும், திருவோடு ஏந்தியும் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கோட்டாட்சியர் அசோகன், டிஎஸ்பி ஜெயச்சந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கிராம உதவியாளரை தாக்கிய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். இதனால் போராட்டம் நீடிக்கிறது.



Tags : Village assistants ,
× RELATED 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள 2,299...