லாட்டரி விற்ற 3 பேர் கைது

திருப்பூர், ஜூன் 14:   திருப்பூர் மாநகர பகுதிகளில் லாட்டரி விற்பனை செய்வதாக மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் மாநகர போலீசார் பல இடங்களில் சோதனை நடத்தினர். அதன்படி வடக்கு போலீஸ் நிலைய எல்லை பகுதியான சாந்தி தியேட்டர் பின்புறம் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட மணிகண்டன் (48) கைது செய்தனர். அவரிடமிருந்த 6 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ. 500 பறிமுதல் செய்தனர். அதே போல் தெற்கு போலீஸ் நிலைய எல்லை பகுதிகளான தென்னம்பாளையம், புதுநகர் ஆகிய பகுதிகளில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட கொண்டப்பன் (52) மூர்த்தி (40) ஆகியோரை கைது செய்து 20 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ. 510 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Tags :
× RELATED குலுக்கலுக்கு 2 நிமிடத்துக்கு முன்பு...