வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஆசிரியர் பணிக்கு ஆட்கள் தேர்வு

பெ.நா.பாளையம், ஜூன் 14: கவுண்டம்பாளையத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரிய ஆசிரியர்கள் தேர்வு செய்யும் பணி நாளை (15ம் தேதி) காலை 10 மணிக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் துவங்குகிறது. இதில் பல தனியார் பள்ளிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்கின்றனர். இதில் ஆசிரியர் பயிற்சி முடித்த பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு இல்லை. இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்கப்படும்.இம்முகாமில், வேலைக்கு உத்தரவு பெற்றவர்களின் வேலை வாய்ப்பு பதிவு அட்டை ரத்து செய்யப்பட மாட்டாது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : personnel ,office ,teacher ,
× RELATED கிருஷ்ணகிரியில் சீருடை பணியாளருக்கான இலவச உடற்தகுதி பயிற்சி