×

மெட்ரோ ரயில் நிர்வாகத்தை கண்டித்து சிஐடியூ ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், ஜூன் 14: மெட்ரோ ரயில் நிர்வாகத்தை கண்டித்து திண்டுக்கல்லில் சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பன்னாட்டு நிறுவனங்களில் சிஐடியூ சங்கம் அமைத்த காரணத்திற்காக 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீதான வேலை நீக்க உத்தரவை கைவிட வேண்டும்.

தொழிலாளர் நல சட்டங்களை அமலாக்க வேண்டும். தொழிலாளர் நல சட்டங்களை அமலாக்காத பன்னாட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திண்டுக்கல்லில் சிஐடியு சார்பாக மாநகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடை
பெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கணேசன் சிறப்புரையாற்றினார். மாவட்ட துணை செயலாளர்கள் பிரபாகரன், ஜெயசீலன், ராம்குமார், முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர் வெங்கிடுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். மாவட்ட துணைத் தலைவர் முருகேசன் நன்றி கூறினார்.

Tags : CITU ,protest ,Metro ,
× RELATED சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ திட்டத்தில்...