திண்டுக்கல்லில் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும்

திண்டுக்கல், ஜூன் 14: திண்டுக்கல்லில் தினமும் குடிநீர் வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். தண்ணீர் வியாபாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும். திண்டுக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி துவங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக நடைப்பயண பிரசாரம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இந்த மாநகராட்சிக்குள் 5 லட்சம் பேர் வசிக்கின்றனர். காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் ஆத்தூர் காமராஜர் நீர் தேக்கங்களில் இருந்து குடிநீர் விநியோம் செய்யப்படுகிறது. ஆத்தூர் அணையில் தண்ணீர் வற்றிவிட்ட நிலையில் காவிரி கூட்டுக்குடிநீர்தான் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

இங்கு தினசரி குடிநீர் வழங்க முடியாத நிலை உள்ளது. மேடான பகுதிகளில் சீரான தண்ணீர் விநியோகம் இல்லாத நிலை உள்ளது. பல இடங்களில் இப்போதும் குடிநீர் விநியோகம் சீராகாத நிலை உள்ளது. இது தொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக திண்டுக்கல்லில் நீர் வியாபாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும். நகர மக்களுக்கு தினமும் குடிநீர் வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

குழாய் இணைப்பு செய்யாமல் குடிநீர் விநியோகத்தை ஜப்பான் நிறுவனத்திற்கு தாரை வார்த்ததை கைவிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. திண்டுக்கல் ரவுண்ட் ரோடு அருகில் துவங்கிய இந்த பிரசார இயக்கத்திற்கு நகரத் தலைவர் கார்த்திக்குமார் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் விஷ்ணுவர்த்தன் முன்னிலை வகித்தார்.
 முன்னாள் மாவட்டத் தலைவர் அரபுமுகமது துவக்கி வைத்தார். பிரசார பயணம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று தனியார் தியேட்டர் அருகில் நிறைவடைந்தது. ஒன்றியச் செயலாளர் நிருபன்பாசு வாழ்த்தி பேசினார். வட்டச் செயலாளர் பாலாஜி நிறைவுரையாற்றினார்.

Tags :
× RELATED கடையநல்லூர் நகராட்சி பகுதியில் புதிய குடிநீர் இணைப்பு ஆணை வழங்கல்