பஸ்சுக்காக காத்திருந்தவர் கார் மோதி பலி

ஒட்டன்சத்திரம், ஜூன் 14: ஒட்டன்சத்திரம் அருகே லக்கியன்கோட்டையில் பஸ்சுக்காக காத்திருந்தவர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார். ஒட்டன்சத்திரம் அருகே லக்கியன்கோட்டையைச் சேர்ந்தவர் ஆறுமுகசாமி(55). இவரும் காந்தி நகரை சேர்ந்த குணசேகரன் (64) என்பவரும் நேற்று மாலை பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர். திண்டுக்கலில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சென்ற கார் இவர்கள் மீது மோதியது.

இதில் ஆறுமுகசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். குணசேகரன் இரு கால்களும் உடைந்த நிலையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட போலீசார் காரை ஓட்டி வந்த காளாஞ்சி பட்டியைச் சேர்ந்த சிவனேசன் (34), காரில் உடன் வந்த செல்லமுத்து ஆகியோர் மீது ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED கோவை மாவட்டத்தில் பேருந்து அட்டைக்கு...