தாளவாடி ஜமாபந்தியில் 62 பேருக்கு சான்றிதழ்

ஈரோடு, ஜூன் 14: ஈரோடு மாவட்டம் தாளவாடி தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் கதிரவன் தலைமையில் ஜமாபந்தி நடந்தது. இதில், தாளவாடி உள்வட்டத்தை சேர்ந்த திகினாரை, களரவாடி, பையன்னாபுரம், மாதஹள்ளி, தலமலை, இக்கலூர், ஹாசனூர், திங்களூர், நெய்தாளபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். அதன்படி, 254 மனுக்களை பெற்ற கலெக்டர் கதிரவன் அதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஜமாபந்தியில் இந்து ஊராளி சமுதாயத்தை சேர்ந்த மக்கள் பழங்குடி வகுப்பு சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கை மனு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு இந்து ஊராளி பழங்குடியினர் சான்று, வாரிசு சான்று, பட்டா மாறுதல், சிறு, குறு விவசாயி சான்று உட்பட பல்வேறு சான்றுகள் 62 பேருக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தினேஷ், உதவி இயக்குநர் (நிலஅளவை) ஞானசேகரன், அலுவலக மேலாளர் (குற்றவியல்) சேதுராஜ், தாளவாடி தாசில்தார் பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: