சிப்காட்டில் இன்று மின்தடை

ஈரோடு, ஜூன் 14:   பெருந்துறை சிப்காட் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று (14ம் தேதி) பெருந்துறை வடக்கு மற்றும் நகரப்பகுதிக்குட்பட்ட ஓலப்பாளையம், திருவாச்சி, கந்தாம்பாளையம், வள்ளியம்பாளையம், பெரியமடத்துப்பாளையம், சின்னமடத்துப்பாளையம், மாயா அவென்யூ, சேனிடோரியம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.எஸ்பி அலுவலக கட்டுமான பணிக்காகநிழற்குடை அருகே மண் கொட்டியதால் மக்கள் அவதிஈரோடு, ஜூன் 14: ஈரோடு எஸ்பி அலுவலகத்தின் பின்புறம் புதிதாக 30 லட்சம் ரூபாய் செலவில் பல்நோக்கு கட்டிடம் கட்டும் பணிகள் கடந்த மார்ச் மாதம் துவங்கியது. இந்த கட்டிடத்தில் கேண்டின் உள்ளிட்ட வசதி செய்யப்படுகிறது. பல்நோக்கு மையத்தின் கட்டுமான பணிகளுக்காக காந்திஜி ரோட்டில் உள்ள பஸ் ஸ்டாப் பகுதியில் காம்பவுண்ட்டை இடித்துள்ளனர். இதன் வழியாக கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் ஜல்லி, கற்களை கொண்டு வருகின்றனர்.இதனால், பஸ் ஸ்டாப்பில் பயணிகள் நிற்கவும், அங்கு அமரவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மண் மற்றும் ஜல்லி கொட்டி வைத்துள்ளதால் இந்த நிறுத்தத்தில் பஸ்களும் நிற்பதில்லை. இவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: