ரயில் நிலையத்தில் தவித்த சிறுவன் மீட்பு

ஈரோடு, ஜூன் 14:  ஈரோடு ரயில் நிலையத்தின் 2ம் பிளாட்பாரத்தில் ரயில்வே போலீசார்  நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு 16 வயது சிறுவன் எங்கு செல்வது என தெரியாமல் தனியாக சுற்றி திரிந்தான்.

இதைப்பார்த்த போலீசார், சிறுவனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவன், கேரளா மாநிலம் கண்ணூர் பொன்னம்வயல் பகுதியை சேர்ந்த நவ்சாத் மகன் முகமது சாகிர் (16) என்பதும், அவரது அம்மா திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறி ரயில் மூலம் ஈரோடு வந்ததும் தெரியவந்தது. ரயில்வே போலீசார் அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.  அதன்பேரில், கேரளாவில் இருந்து ஈரோடு வந்த பெற்றோரிடம் அறிவுரை கூறி சிறுவனை பத்திரமாக ஒப்படைத்தனர்.
Advertising
Advertising

Related Stories: