தஞ்சை மாநகரில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்

தஞ்சை, ஜூன் 14: தஞ்சை மாநகரில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான திருமானூர் தலைமை குடிநீர் நீரேற்று நிலையத்தில் இருந்து தஞ்சை நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக போடப்பட்டுள்ள குடிநீர் விநியோக பிரதான குழாயில் பழுது ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இப்பழுதை சீர் செய்யும் பணி நடப்பதால் தஞ்சை மாநகராட்சி 1வது வார்டு முதல் 51 வார்டு வரை அனைத்து பகுதிகளிலும் இன்றும், நாளையும் (14ம் தேதி மற்றும் 15ம் தேதிகளில்) குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: