தஞ்சையை சூழ்ந்த கருமேகங்கள் திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருக்காட்டுப்பள்ளி, ஜூன் 14: திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்து 10 கிலோ புகையிலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.திருக்காட்டுப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதி கடைகளில் புகையிலை, குட்கா மற்றும் பான்பராக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து நேற்று திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் உள்ள கடைகளில் சுகாதார துறையை சேர்ந்த பாளையப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மேற்பாரவையாளர் ஆனந்தன் தலைமையில் பூதலூர் வட்டார சுகாதார ஆய்வாளர்கள் ராமநாதன், தனபால், குமார் மற்றும் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் தமிழ்வாணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது கடைகளில் குட்கா மற்றும் பான்பராக் பொருட்கள் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 10 கிலோ புகையிலை பறிமுதல் செய்து கடைகாரர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.அதிகாரிகள் அதிரடி

Advertising
Advertising

Related Stories: