குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி கும்பகோணம் தூய அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா தேர்பவனி

கும்பகோணம், ஜூன் 14: கும்பகோணம் தூய அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா தேர்பவனி நடந்தது.கும்பகோணம் தூய அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவி கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைதொடர்ந்து தினம்தோறும் சிறப்பு திருப்பலி நடந்தது. கடந்த 11ம் தேதி இரவு பெருவிழா தேர்பவனி நடந்தது. மின்னொளி அலங்காரத்தில் தேர்பவனியை குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி செய்து வைத்து துவக்கி வைத்தார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இதைதொடர்ந்து நேற்று அருட்தந்தை அந்துவான் திருவிழா திருப்பலி செயது கொடியிறக்கம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை தேவதாஸ், உதவி பங்குத்தந்தை மற்றும் பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: