கல்லணையில் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

திருக்காட்டுப்பள்ளி, ஜூன் 14: கல்லணையில் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.

தஞ்சை மாவட்டம் கல்லணையில் காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகியவை பிரிந்து செல்கின்றன. இவைகள் மூலம் டெல்டா பகுதி விவசாயிகள் தண்ணீர் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சை பொதுபணித்துறை கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளராக பதவியேற்ற அசோகன், கல்லணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வில் தண்ணீர் திறப்பதற்கான முன்னேற்பாடு என்ன செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து கேட்டறிந்ததுடன் ரெகுலேட்டர்கள் சரியானபடி இயங்குகிறதா என்று ஷட்டர்களை ஏற்றி இறக்கி பார்வையிட்டார். பின்னர் உதவி பொறியாளர் ஆண்டுவிடம் ஆலோசனை வழங்கினார்.ஆய்வின்போது புதுச்சேரி கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், உதவி செயற்பொறியாளர் சண்முகமணி, தஞ்சை உதவி பொறியாளர் சிவக்குமார் உடனிருந்தனர்.

Related Stories: