பைபாஸ் ரவுண்டானாவில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அணுகுசாலை அகலப்படுத்தப்படுமா?

கரூர், ஜூன் 14: பைபாஸ் ரவுண்டாவில் நெ
ரிசலைக் கட்டுப்படுத்த அணுகு சாலையை அகலப்படுத்த வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ்புறம் அணுகுசாலை உள்ளது. இந்த சாலை வழியாக கரூர் நகருக்குள் வாகனங்கள் வந்து செல்கின்றன. திருப்பூர், ஈரோடு, கோவை, நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் மேம்பாலத்திற்கு கீழே உள்ள அணுகுசாலை வழியாக வந்து செல்கிறது. ரவுண்டானா அணுகு சாலையில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. சிக்னல் குறைந்தது 4நிமிடங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை மாலை வேளைகளில் வாகனங்கள் அணிவகுத்து நீண்ட வரிசையில் நிற்கின்றன. அதேபோல சிக்னல் கிடைத்ததும் அனைத்து வாகனங்களும் சாலை குறுகலாக இருப்பதால் செல்ல முடிவதில்லை. நெரிசலில் ஊர்ந்து செல்வதற்குள் மீண்டும் ரெட் சிக்னல் விழுந்து விடுகிறது.

சாலை குறுகலாக இருப்பதே இந்த நெரிசலுக்கான காரணம். வெளி மாவட்டங்களில் இருந்து கரூர் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லும் பேருந்துகள் இந்த நெருக்கடியில் இருந்து வந்து திரும்புவதற்கே சுமார் அரைமணி நேரம் ஆகி விடுகிறது. இதனால் பயண தூரம் மேலும் அரைமணிநேரம் கூடுதலதாகிறது. எனவே சாலையை அகலப்படுத்தி சிக்னல் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் சாலையை கடந்து செல்வதற்கு சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

Tags : access road ,Bypass Roundabout ,
× RELATED நெடுஞ்சாலைத்துறை சார்பில் பெல் அணுகு சாலையில் 1000 பனை விதைகள்