கரூர் அரசு மருத்துவமனையில் ஆர்ஓ சிஸ்டம் பழுதால் குடிநீரின்றி மக்கள் தவிப்பு

கரூர், ஜூன் 14: அரசு மருத்துவமனையில் ஆர்ஓ சிஸ்டம் பழுது காரணமாக குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்கள் பயனபாட்டிற்காக ஆர்ஓ சிஸ்டம் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக ஆர்ஓ சிஸ்டம் வேலை செய்யவில்லை. இதனால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் இல்லை. புறநோயாளிகள், மற்றும் உள்நோயாளிகளுடன் உடன் இருப்பவர்கள் குடிக்க தண்ணீர் இன்றி அவதிப்படுகின்றனர். கடைகளில் அதிக விலை கொடுத்து குடிநீர் பாட்டில்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். மருத்துவமனை நிர்வாகம் இந்த விஷயத்தில் மெத்தனம் காட்டி வருகிறது. குறைகேட்கவும் யாரும் இல்லை. சிறியபாட்டில் தண்ணீர் ரூ.5 தான்.

ஆனால் ரூ.10க்கு விற்பனை செய்கின்றனர். ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீர் ரூ20க்கு விற்பனை செய்யப்படுகிறது. குளிர்ந்த நீராக இல்லாவிட்டாலும் அதற்கான கட்டணத்தையும் வாங்கிக் கொள்கின்றனர். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் என போர்டுதான் வைத்துள்ளனர். அதற்குரிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.


Tags : Karur Government Hospital ,RO ,
× RELATED டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக...