தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் விளையாட ராஜராஜன் பள்ளி மாணவர் தேர்வு

காரைக்குடி, ஜூன் 14:  சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளில், காரைக்குடி ராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளி மாணவர் ரித்திஸ் சிறப்பாக விளையாடி தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் விளையாட தேர்வு பெற்றுள்ளார். அதேபோல் இப்பள்ளி மாணவர் கண்ணன், மாவட்ட அளவில் நடந்த பல்வேறு செஸ் போட்டிகளில் வெற்றி பெற்று மகாராஷ்டிராவில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் 17வது இடம் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.

Tags : Tamilnadu ,cricket team ,Rajarajan ,
× RELATED சொல்லிட்டாங்க...