சிங்கம்புணரியில் புதிய தாலுகா அலுவலக கட்டிடம் திறப்பு

சிங்கம்புணரி, ஜூன் 14: சிங்கம்புணரி அருகே அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட முத்துவடுகநாதர் நகரில் கட்டப்பட்ட புதிய தாலுகா அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. சிங்கம்புணரி எஸ்.புதூர் ஒன்றியங்களை ஒன்றிணைத்து சிங்கம்புணரியை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுகா கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த 2016 செப்டம்பரில் சிங்கம்புணரியை தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. கடந்த  2017 மே மாதம் சிங்கம்புணரி நகர் மண்டபத்தில் தற்காலிக தாலுகா அலுவலகம் செயல்பட்டது. ஏப்ரல்  2018ம் ஆண்டு முத்துவடுகநாதர் நகரில் ரூ.2 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் புதிய தாலுகா அலுவலகம் கட்டும் பணிகள் தொடங்கியது.  தொடர்ந்து நேற்று காலை புதிய தாலுகா அலுவலகம் திறக்கப்பட்டு, அலுவலக பணிகளை தாசில்தார் பஞ்சவர்ணம் தொடங்கினார். தனி வட்டாட்சியர் மாணிக்கவாசகம் மண்டல துணை வட்டாட்சியர் கமலக்கண்ணன், பொறியாளர்கள் கண்ணன், செல்வராஜ், வருவாய் ஆய்வாளர்கள் சாந்தி, இந்திராணி, கவிதா, தாலுகா பணியாளர்கள் மற்றும் விஏஓக்கள், தலையாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : office building opening ,Taluk ,
× RELATED வீட்டுமனை பட்டா, உதவித்தொகை கோரி தாலுகா ஆபீசுக்கு திரண்டுவந்த மக்கள்