சாக்கடை நீர் சூழ்ந்த தாலுகா அலுவலக பேருந்து நிறுத்தம்

சிங்கம்புணரி, ஜூன் 14: சிங்கம்புணரி அருகே அணைக்கரைப்பட்டி ஊராட்சி முத்துவடுகநாதர் நகரில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்கூரையை சுற்றிலும் சாக்கடையால் நிரம்பியுள்ளதால் அப்பகுதி மக்கள் சாலையில் ஓரத்தில் வெயிலில் பஸ்சிற்காக காத்திருக்கம் நிலை ஏற்பட்டுள்ளது.தாலுகா அலுவலகம் மற்றும் அரணதான் குண்டு, காசியாபிள்ளை நகர், குறிஞ்சி நகர் மக்கள் இந்த பேருந்து நிருத்தத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்கின்றனர். முத்துவடுகநாதர் நகர் குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் பேருந்து நிறுத்தத்தின் முன்பு உள்ள பாலத்தின் வழியாக அணத்தாங்குண்டு கண்மாய்க்கு சென்றது. இதனால் அரணத்தாங்குண்டு பகுதி மக்கள் கழிவு நீர் வருவதற்கு எதிர்பு தெரிவித்தனர். இதனால் இந்த பேருந்து நிறுத்தத்தின் முன்பு சாக்கடை நீர் தேங்குவதுடன், அவ்வழியாக செல்லும்   காவிரி கூட்டுக் குடிநீர் பைப்புகளில் உடைப்பு ஏற்பட்டு குடிதண்ணீருடன் சாக்கடை தண்ணீரும் கலந்து செல்கிறது. தேங்கிய சாக்கடை நீரால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடியாக கழிவு நீரை கொண்டு செல்ல மாற்று வழியை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : office bus stop ,
× RELATED கலெக்டர் ஆபீஸ் பஸ் ஸ்டாப் இடமாறுகிறது:...