விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா

காரைக்குடி, ஜூன் 14:  காரைக்குடி அருகே கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டிற்கான வகுப்புகள் துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் பாலமுருகன் வரவேற்றார். கல்லூரி செயலாளர் வகுப்புகளை துவக்கி வைத்து பேசுகையில், ஒவ்வொரு மாணவர்களுக்காகவும் தங்களை தியாகம் செய்பவர்கள் ஆசிரியர்கள். எனவே ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு மரியாதை தர கற்றுக்கொள்ள வேண்டும். சாதிக்க வேண்டும் என்ற சிந்தனையை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். படிக்கும் காலத்தில் நல்ல நண்பர்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். நினைவாற்றல் மற்றும் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். பட்டிமன்ற பேச்சளார் மகாசுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துறைத்தலைவர் சோலையன் நன்றி கூறினார்.

× RELATED கொடைக்கானலில் பேரி அறுவடை துவக்கம்