நகருக்கு வெளியே முதியவர்களை இறக்கிவிடும் அரசு பேருந்துகள் நகருக்குள் வந்து செல்ல வலியுறுத்தல்

மானாமதுரை, ஜூன் 14: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் மானாமதுரையில் நடந்தது. தலைவர் அமல்ராஜ் தலைமை வகித்தார். இணை செயலாளர் நாராயணமூர்த்தி திருக்குறள் ஒப்புவித்து விளக்கமளித்தார். துணைத்தலைவர் பாண்டி வரவேற்றார். துணைத்தலைவர் ராசு உறுப்பினர்கள் நலம் குறித்து பேசினார். கூட்டத்தில்., மதுரை-ராமேஸ்வரம் செல்லும் பஸ்களில் மானாமதுரை பயணிகளை தல்லாகுளம் முனியாண்டி கோவில் நிறுத்தத்தில் இறக்கி விடுவதால் முதியவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளி பயணிகள் அனைவரும் மானாமதுரை பைபாஸ் ரோட்டிற்கு சிரமப்பட்டு நடந்து வருகின்றனர். எனவே பயணிகளை ஆனந்தபுரம் சுரங்கப்பாதை அருகே இறக்கிவிட்டால் பயணிகள் சிரமமின்றி செல்வர். இதற்கு மாவட்ட கலெக்டர், போக்குவரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இணை செயலாளர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.

Tags : city ,
× RELATED பிரேக் டவுனாகி நடுவழியில் நிற்கும் அரசு பேருந்துகளால் பயணிகள் அவதி