காரைக்குடி அருகே மகாலட்சுமி கோவில் கும்பாபிஷேக விழா

காரைக்குடி, ஜூன் 14:  காரைக்குடி அருகே கண்டனூர் பாலையூர் ஸ்ரீமகாலட்சுமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. காரைக்குடி அருகே கண்டனூர் பாலையூரில் ஸ்ரீமகாலட்சுமி கோவிலில் புதிதாக கட்டப்பட்ட ராஜகோபுர கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 12ம் தேதி மாலை 4 மணிக்கு அனுக்ஞை பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை 5.30 மணிக்கு கோ பூஜையும், யாக சாலை ஹேமங்கள் நடந்தது. காலை 7.30 முதல் 8.10க்குள் ராஜகோபுர மகாகும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் கோவை, சென்னை, காரைக்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பாலையூர் நகரத்தார்கள் செய்திருந்தனர்.

Tags : ceremony ,Mahalakshmi Temple ,Karaikudi ,
× RELATED புளியங்குடியில் முப்பெரும் விழா