இடைப்பாடி அருகே பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி

இடைப்பாடி, ஜூன் 14:  இடைப்பாடி அருகே பஸ் மோதிய விபத்தில், 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இடைப்பாடி அருகே அரசிராமணி பேரூராட்சியில் உள்ள செட்டிப்பட்டி, ஆராயன்காட்டை சேர்ந்த பழனிசாமி மகன் மணி(29). கூலித்தொழில் செய்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்த முத்து மகன் கார்த்திக்(30). நண்பர்களான இருவரும் நேற்று மதியம் செட்டிப்பட்டி பகுதியில் இருந்து மூலப்பாதை நோக்கி சென்றனர்.

Advertising
Advertising

அப்போது, முன்னால் சென்ற மினிலாரியை முந்திசெல்ல முயன்றபோது, எதிரே வந்த டூரிஸ்ட் பஸ் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இதுகுறித்து தகவலறிந்த வந்த தேவூர் எஸ்ஐ பாரதிராஜா, இருவரது சடலத்தையும் மீட்டு இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டு, தலைமறைவான அந்தியூரை சேர்ந்த பஸ் டிரைவர் இளவரசனை தேடி வருகின்றனர். இறந்த மணிக்கு சித்ரா என்ற மனைவியும், 6 மாத பெண் குழந்தையும் உள்ளது.

Related Stories: