அம்மம்பாளையம் சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

ஆத்தூர், ஜூன் 14: ஆத்தூர் அடுத்த அம்மம்பாளையத்தில் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆத்தூர் ஒன்றியம் கல்லாநத்தம் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அருகில் உள்ள அம்மம்பாளையம் கிராமத்திற்கு செல்லும் சாலை, கடந்த சில ஆண்டுகளாக குண்டும், குழியுமாக இருந்தது.
Advertising
Advertising

அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததையடுத்து, சாலை செப்பனிடப்பட்டு ஜல்லி கொட்டப்பட்டுள்ளது. ஆனால், ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு 3 மாதங்களாகியும், சாலை அமைக்கப்படாமல் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், அந்த சாலையை பயன்படுத்தி வரும் மக்கள், மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த சாலையை உடனடியாக சீரமைத்து, பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: