பாப்பாரப்பட்டியில் பூட்டியே கிடக்கும் இறுதி சடங்கு மண்டபம்

ஆட்டையாம்பட்டி, ஜூன் 14:  ஆட்டையாம்பட்டி, நைனாம்பட்டி, பாப்பாரப்பட்டி பகுதி பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக, பாப்பாரப்பட்டி ஏரிக்கரையோரம், ₹10 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நீத்தார் இறுதிச்சடங்கு மண்டபம் கட்டப்பட்டது. ஆனால், இந்த மண்டபத்திற்கு மின்வசதி மற்றும் தண்ணீர் வசதி செய்யாததால் பூட்டியே கிடக்கிறது. இங்கு இறுதி சடங்கு செய்ய வரும் பொதுமக்கள், ஏரிக்கரை ஓரமுள்ள காலி நிலத்தில் கூடாரம் அமைத்து, இறுதி சடங்கு செய்து வருகின்றனர்.

Advertising
Advertising

இந்நிலையில், இப்பகுதியில் இரவு நேரத்தில் கும்மிருட்டாக இருப்பதால், குடிமகன்கள் பாராக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், குடித்துவிட்டு பாட்டிலகளை சாலைகளில் உடைத்து செல்வதால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி செய்து கொடுத்து, இறுதி சடங்கு மண்டபத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: