ஓமலூரில் திமுக சார்பில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம்

ஓமலூர், ஜூன் 14: ஓமலூரில், திமுக சார்பில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடந்தது. ஓமலூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், முத்துநாயக்கன்பட்டியில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் செல்வகுமரன் தலைமை வகித்தார். வெங்கடேசன் வரவேற்றார்.

Advertising
Advertising

குப்புசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தலைமைக்கழக பேச்சாளர் குடியாத்தம் குமரன் கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து, நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு, மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ  தங்க மோதிரங்களை வழங்கினார்.

மேலும், கட்சி நிர்வாகிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன், தாமரைக்கண்ணன், திருநாவுக்கரசு, தங்கராஜ், கருணாகரன், அருண்பிரசன்னா, ரமேஷ், மதிவாணன், அருமை சுந்தரம், ரவிச்சந்திரன், பிரகாஷ், மணி, பிரபு உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: