புல்வாமா தாக்குதலில் பலி சவலாப்பேரி சிஆர்பிஎப் வீரர் பெற்றோருக்கு ரூ.2.50 லட்சம்

கோவில்பட்டி, ஜூன் 14:  புல்வாமா  தாக்குதலில் உயிரிழந்த சவலாப்பேரி சிஆர்பிஎப் வீரர்  சுப்பிரமணியனின் பெற்றோருக்கு நியூடெல்லி மருந்து உற்பத்தி நிறுவனம்   ரூ.2.50 லட்சம்  வழங்கியது. கடந்த சில மாதங்களுக்கு  முன்பு ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதி நடத்திய கொடூரத் தாக்குதலில்  கோவில்பட்டி அருகேயுள்ள சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணியன்  உள்ளிட்ட சிஆர்பிஎப் 44 பேர் உயிரிழந்தனர். சவலாப்பேரியில்  சுப்பிரமணியனை இழந்துவாடும் பெற்றோருக்கு  மேன்கைண்ட் நியூடெல்லி மருந்து உற்பத்தி நிறுவனம் சார்பில் ரூ.2.50 லட்சம் வழங்கப்பட்டது. இதையொட்டி கோவில்பட்டி- எட்டயபுரம் ரோட்டில்  செயல்படும் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில், முதுநிலை குடிமை மருத்துவர் டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் லதா  வெங்கடேஷ் உள்ளிட்டோர் மறைந்த சிஆர்பிஎப் வீரர்  சுப்பிரமணியனின் தந்தை கணபதி, தாய் மருதாத்தாள் ஆகியோரிடம்   மேன்கைண்ட் நியூ டெல்லி மருந்து உற்பத்தி நிறுவனம் சார்பில் ரூ.2.50 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர். அப்போது மருந்து நிறுவன ஊழியர்கள்  உடனிருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: