திருச்செந்தூரில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் தர்ணா

திருச்செந்தூர்,  ஜூன் 14:  திருச்செந்தூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஊழியர்கள்  தர்ணா போராட்டம் நடத்தினர். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 5 மாதங்களாக சம்பளம்  வழங்கப்படாததை கண்டித்து திருச்செந்தூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடந்தது. கிளைத்தலைவர் காளியப்பன் தலைமை வகித்தார். இதில் ஊழியர் சங்க  கிளைச் செயலாளர் சந்திரசேகரன், ஒப்பந்த ஊழியர் சங்க கிளைச்செயலாளர் தனபால்  பேசினர். இதில் இசக்கியம்மாள், மெடில்டா, கெவின், கந்தசாமி, சரவணன்,  தர், ரஞ்சித், மாரிமுத்து, சரவணன், மகேஸ்வரன், சுப்பையா, சுப்பிரமணியன்   உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மெடில்டா நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: