கோவில்பட்டியில் ரத்த தான கழக நிர்வாகிகள் கூட்டம்

கோவில்பட்டி, ஜூன் 14: கோவில்பட்டியில் அனைத்து ரத்த தான கழக நிர்வாகிகள் ஆலோசனை  கூட்டம் நடந்தது. ஜீவ அனுக்கிரகா ரத்ததான கழக நிறுவனர் ராஜேந்திரன் தலைமை  வகித்தார். கூட்டத்தில் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றி வந்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரபாகரன் இடமாறுதல் உத்தரவை ரத்துசெய்து அதே இடத்தில் பணியமர்த்த வேண்டும். இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது  என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில்   புத்துயிர் ரத்ததான கழகத் தலைவர்  தமிழரசன், பகத்சிங் ரத்ததான கழகச் செயலாளர் காளிதாஸ், தலைவர் ராஜபாண்டி,  குருதிகொடை பாசறை மாரியப்பன், பசுபதிபாண்டியன் ரத்ததான கழகம் பார்த்திபன்,  பசும்பொன் ரத்ததான கழகம் செண்பகராஜ், சீயான் விக்ரம் ரத்ததான கழகம்  கருத்தப்பாண்டியன், மகாத்மாகாந்தி ரத்ததான கழக நிறுவன தலைவர்  எஸ்.எம்.தாஸ், சூர்யா ரத்ததான கழகம் சரமாரி, ஸ்டார் ரத்த தான கழகத் தலைவர்  செல்வகுமார் உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: