உடன்குடி ஒன்றியத்தில் இந்து முன்னணி கொடியேற்று விழா

உடன்குடி, ஜூன் 14:  உடன்குடி ஒன்றிய பகுதிகளில் இந்து முன்னணி கொடியேற்று  விழா நடந்தது. பரமன்குறிச்சி அருகே முருகேசபுரம், புங்கம்மாள்புரம்,  சரவணபெரியவன்புள்ளி உள்ளிட்ட கிராமங்களில் நடந்த கொடியேற்று விழாவுக்கு ஒன்றிய பொதுச்செயலாளர் கேசவன் தலைமை வகித்தார். கிளைத் தலைவர்கள் தனபால், சங்கர், கென்னடிபாபு, நிர்வாகிகள்  பொன்கந்தசாமி, பாஸ்கரன், முருகன், வேல்குமார், உதயகுமார் முன்னிலை  வகித்தனர். தெற்கு மாவட்டத் தலைவர் முருகேசன், கொடியேற்றி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து வாரக்கூடுதல், கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் இந்து முன்னணி கிளைத்  தலைவர் வசந்தகுமார், ராஜன், நம்பிராஜன், பாஸ்கரன், பாலாஜி, சுதாகர்,  தினகரன், குருசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: