இடைநின்ற மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி மையம் கழுகுமலையில் துவக்கம்

கழுகுமலை, ஜூன் 14:   இடைநின்ற மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி மையம் கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் துவங்கப்பட்டது. கயத்தாறு ஒன்றிய கல்வி இயக்கம் சார்பில் என்ஆர்எஸ்டிசி எனும் இந்த சிறப்பு பயிற்சி மையத்தை கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சீத்தா மகேஸ்வரி தலைமை ஏற்று துவக்கிவைத்தார். இம்மையத்தில் பள்ளிப் படிப்பை இடையிலேயே நிறுத்தம் செய்த 10 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இதையடுத்து இவர்களுக்கு இலவசமாக நோட்டு. புத்தகங்கள் வழங்கப்பட்டன. முகாமில் கயத்தாறு ஒன்றிய பிஆர்டி ஆசிரியர் கேத்ரின், உதவி தலைமை ஆசிரியர் பிரேமி மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

Related Stories: