நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரி முதலாண்டு வகுப்பு துவக்க விழா

நாசரேத், ஜூன் 14:  நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டில் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது. புனித லூக்கா சமுதாய கல்லூரி இயக்குநர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் வரவேற்றார். முன்னாள் எம்.பி ஏ.டி.கே. ஜெயசீலன், பிரகாசபுரம் சேகரகுரு. ஜெபவீரன் வாழ்த்திப் பேசினர். கல்லூரி பர்சார் முத்துசந்திரசேகர், துறைத் தலைவர்கள், புதிய மாணவர்கள் மற்றும் பெற்றோர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.  ஏற்பாடுகளை கல்லூரித் தாளாளர் ஜெபச்சந்திரன், முதல்வர் கோயில்ராஜ் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: