லாரி கிளீனர் தற்கொலை

ஓட்டப்பிடாரம், ஜூன் 14:  கோவில்பட்டியைச் சேர்ந்த சண்முகம் மகன் முருகன் (37). இவருக்கும், பசுவந்தனை அடுத்த கீழமங்கலத்தை சேர்ந்த வேலம்மாள் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இதையடுத்து அதே  கிராமத்தில் இருவரும் வசித்து வந்தனர். குழந்தைகள் இல்லாததால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வேலம்மாள் கணவரை பிரிந்து அங்குள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து முருகன் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து விரைந்துசென்ற பசுவந்தனை போலீசார், உடலை கைப்பற்றி ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Advertising
Advertising

Related Stories: