தூத்துக்குடி தெற்கு மாவட்ட அமமுக ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி, ஜூன் 14:  தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் பாலன், சுகந்திகோமஸ், ஆனந்த்ராஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மண்டல செயலாளர் மாணிக்க ராஜா பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நமது கட்சியின் பலம், மற்ற கட்சிகள் ஆச்சரியப்படும் அளவிற்கு இருக்கும். மக்களவைத் தேர்தலில் தோல்விக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடக்க உள்ளது.

எனது மண்டலத்திற்கு கீழ் 29 தொகுதிகள் வருகிறது. 9 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். உன்மையான தொண்டர்கள் யாரும் இங்கிருந்து செல்லவில்லை.  பார் நடத்தியவர்கள், கான்டிராக்ட் நடத்தியவர்கள்தான் பணம் சம்பாதிக்க இபிஎஸ், ஓபிஎஸ் பக்கம் சென்றுள்ளனர். அதிமுக கூட்டணி 18% மட்டுமே வாக்கு வாங்கியுள்ளது. ஆனால்,  அமமுக அனைத்து தடைகளையும் தாண்டி 6% வாக்கு பெற்றுள்ளது. வரும் உள்ளாட்சி தேர்தலிலும், சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றிகளை குவிப்போம்’’ என்றார். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் லெனின், டாக்டர் கோசல்ராம், முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸ், மாவட்ட நிர்வாகிகள் நம்பிராஜன், இசக்கிசெல்வம், பிரைட்டர், செல்வக்குமார், ராமச்சந்திரன், தங்கதுரை, காசிலிங்கம், சின்னசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: