ஆலந்தலை புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் சிறப்பு திருப்பலி

திருச்செந்தூர்,  ஜூன் 14: திருச்செந்தூர் அருகே ஆலந்தலை புனித அந்தோணியார் ஆலய  திருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் கிறிஸ்தவ  மக்கள் திரளாகப் பங்கேற்றனர். திருச்செந்தூர் ஆலந்தலையில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா  ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருக்கிறது. இதன்படி இந்தாண்டுக்கான ஆலய திருவிழா கடந்த  1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி நவ நாட்களில் காலை 6.15 மணிக்கு  திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, பிரார்த்தனை, மறையுரை,  நற்கருணை ஆசீர் நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு அந்தோணியாரின்  தேர்பவனி நடந்தது. பின்னர் நடந்த மாலை ஆராதனையில் உலவியல் மேற்படிப்பு ஜெய்கர்  தலைமையில் மறையுரை இடம்பெற்றது. திருவிழா தினமான நேற்று  காலை 6.30 மணிக்கு சிவகங்கை ரோச் மாநகர்  பங்குத்தந்தை அமல்ராஜ் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. இதில் பங்குதந்தை  ஜெயக்குமார், இணை பங்குத்தந்தைகள் ஜான்சன், பிரான்சிஸ் மற்றும் சபையினர்,  ஊர்நலக் குழுவினர் மற்றும் கிறிஸ்தவர்கள்  என திரளானோர் பங்கேற்றனர்.

Advertising
Advertising

திருப்பலியில்  பங்கேற்றவர்களுக்கு கேள்விகள் கேட்டு சரியாகப் பதிலளித்தவர்க்கு பரிசு  வழங்கப்பட்டது. திருப்பாடல் மற்றும் பாடப்போட்டியில் பங்கேற்ற  குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் சிவகங்கை ரோச்  மாநகரத்தில் ஆலயம் கட்டுவதற்கு ஆலந்தலை மக்கள் சார்பில் ரூ.50 ஆயிரம்  வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆலந்தலை பங்குத்தந்தை ஜெயக்குமார், இணை  பங்குத்தந்தைகள் ஜான்சன், பிரான்சிஸ் மற்றும் சபையினர்கள்,  ஊர்நலக்கமிட்டியினர் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

Related Stories: