சாத்தான்குளம் கடை வீதியில் ரகளை செய்த வாலிபர் கைது

சாத்தான்குளம், ஜூன் 14:  சாத்தான்குளம் கடை வீதியில் பஜாரில் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சாத்தான்குளம் எஸ்ஐ லூயிஸ் லாரன்ஸ் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது பழைய பஸ் நிலையம் கடை வீதி பகுதியில், வாலிபர் ஒருவர் பொதுமக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், தட்டார்மடம் வைரவம்புதுக்குடியை சேர்ந்த வேல் மகன் பாலசுரேஷ் (29) என்பதும், தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார், அவரை கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: