தூத்துக்குடியில் நாளை மின் தடை

தூத்துக்குடி, ஜூன் 14: தூத்துக்குடி நகர்ப்பகுதியில் நாளை (15ம்தேதி) மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தூத்துக்குடி நகர்புறக் கோட்ட செயற்பொறியாளர் விஜய சங்கர பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு..

தூத்துக்குடி-  எட்டயபுரம் சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை  (15ம் தேதி) நடக்கிறது. இதன் காரணமாக தூத்துக்குடி போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம்தெரு, 1ம் ரயில்வே கேட்,  2ம் ரயில்வே கேட், மட்டக்கடை, கடற்கரை சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள  பகுதிகள், தெப்பகுளம்,  சிவன் கோவில் தெரு, டபுள்யூ.ஜி.சி ரோடு, ஜார்ஜ்  ரோடு, வி.இ. ரோடு, ஸ்டேட் பாங்க் காலனி, முத்து கிருஷ்ணாபுரம், முத்தம்மாள்  காலனி, கேடிசி நகர்,சிவந்தாகுளம் பிரதான சாலை, தாமோதரநகர், குறிஞ்சிநகர், சிதம்பர நகர்,பிரையன்ட் நகர்,சுப்பையா முதலியார்புரம் அண்ணா நகர், டூவிபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9  மணி முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
Advertising
Advertising

இதேபோல்  நாளை (15ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையில் புறநகர் பகுதிகளான  ஓட்டப்பிடாரம், ஓசநூத்து, ஆரைக்குளம், பாஞ்சாலங்குறிச்சி, வெள்ளாரம்,  க.சுப்பிரமணியபுரம், குறுக்குசாலை, புதியம்புத்தூர், சில்லாநத்தம், வீரபாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மின் தடை ஏற்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: