பாபநாசம் நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்வு

வி.கே.புரம், ஜூன் 14:  மேற்குத்தொடர்ச்சி மலையில் சாரல் நீடிப்பதால் பாபநாசம் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. இதனால் அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து 35 அடியானது. நெல்லை மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக தொடர்ந்து சாரல் நீடிக்கிறது. இதனால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து உள்ளது. நேற்று முன்தினம் 33.40 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 2 அடி அதிகரித்து 35.50 அடியானது. அணைக்கு விநாடிக்கு 643 கன அடி தண்ணீர் வருகிறது. 25 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு 51.08 அடி, மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 58.15 அடியாக உள்ளது. அணைக்கு 109 கனஅடி நீர் வருகிறது. 275 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கடனா நதி அணை நீர்மட்டம் 25 அடி, ராமநதி அணை நீர்மட்டம் 25 அடி, கருப்பாநதி 24 அடி, குண்டாறு அணை 11.62 அடி, வடக்குபச்சையாறு 2.75 அடி, நம்பியாறு 11.35 அடி, கொடுமுடியாறு 10.50 அடி, அடவிநயினார் அணை நீர்மட்டம் 31 அடியாகவும் உள்ளது. மழையளவு விவரம்: பாபநாசம்- 6 மிமீ, கடனா-1, ராமநதி-2, குண்டாறு-9, அடவிநயினார்-9, செங்கோட்டை-8, தென்காசி-4 மிமீ மழை பெய்துள்ளது.

Related Stories: