சேரன்மகாதேவியில் சூறைக்காற்றில் மரம் சாய்ந்து மின்கம்பங்கள் சேதம்

வீரவநல்லூர், ஜூன் 14:  சேரன்மகாதேவியில் சூறைக்காற்றில் மரம் சாய்ந்து விழுந்ததில் மின்கம்பங்கள் சேதமடைந்தன. சேரன்மகாதேவி பேரூராட்சி அலுவலகம் எதிரே பழமையான வேப்பமரம் இருந்தது. நேற்று இப்பகுதியில் திடீரென வீசிய சூறைக்காற்றில், மரம் வேரோடு சாய்ந்து தெருவில் விழுந்தது. இதில் அப்பகுதியில் இருந்த 2 மின்கம்பங்கள் சேதமடைந்து வயர்கள் அறுந்து தொங்கின. இதுகுறித்து உடனடியாக பேரூராட்சி பணியாளர்கள் மின்வாரிய அலுவகத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வயர்கள் மற்றும் மரக்கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. சம்பவத்தின்போது அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: